பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து., பிரபல நடிகை பளீச் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் காயத்ரி. விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் இவர் பிரபலமானார். இதை தொடர்ந்து, இவர் ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 குறித்து அவர் தனது பளீச் கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த தருணத்தில் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கையில் பாப்கார்ன்னுடன் நானும் உங்களை போலதான் ஷோவை பார்க்க போகிறேன். என்னை நடிக்க அழைப்பவர்களுக்கு நான் சொல்வது, உள்ளேன் அய்யா'' என அவர் பதிவிட்டுள்ளார். அண்மையில் இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து போகிறார் என வதந்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.