RJ RACHANA: நெஞ்சுவலியால் பிரபல இளம் RJ மரணம்!.. அதிர்ச்சியில் கன்னட டிவி உலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட ரேடியோ ஜாக்கி ரச்சனா, 39 வயது, மாரடைப்பால் காலமானார்.

Advertising
>
Advertising

பிரபல கன்னட ரேடியோ ஜாக்கி மற்றும் நடிகை ரச்சனா. இவர் பெங்களூரில் புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியாக இருந்தார். இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதற்கு காரண இவரது நச்சென்ற நகைச்சுவை பேச்சு மற்றும் துடிப்பான திறன் தான். இவரது பேச்சை கேட்பவர்கள் பலரும் இவரது நகைச்சுவை உணர்வுக்காகவே கேட்பதாக கூறப்படுகிறது.

நடிகையாகவும் ..

இதைத் தவிர, இவர் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார். ஆம், சிம்பிள் அகி ஒந்த் லவ் ஸ்டோரி என்கிற பிரபல கன்னட திரைப்படத்திலும் ரேடியோ ஜாக்கி ரச்சனா தோன்றினார். ஆனால் இந்த படத்திலும் இவர் ரேடியோ ஜாக்கியாகவே தோன்றி நடித்திருந்தார். தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் தோன்றுவார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தான், அந்த துர்சம்பவம் நடந்தது.

நெஞ்சுவலி

ஆம், பெங்களூரில் ஜே.பி.நகரில் உள்ள தனது பிளாட்டில் ரச்சனாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது இறந்துவிட்டதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இரங்கல்

இளம் ஆர்.ஜேயின் இந்த அகால் மறைவு, இவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் கன்னட திரைத்துறையினர், சின்னத்திரையினர் மற்றும் பொதுவான கன்னட மக்கள்  அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்ஜே ரச்சனாவின் மறைவுக்கு கன்னட தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

39 age Kannada Popular RJ Rachana dies of cardiac arrest

People looking for online information on Kannada RJ Rachana dies, Poular RJ Rachana dies, RIP RJ Rachana, RJ dies of cardiac arrest, RJ Rachana will find this news story useful.