‘விஷால்-31’ வில்லன் இவரா?… மாஸ் தகவல்..!! அப்போ ஆக்‌ஷன் ப்ளாக் செம்மயா இருக்கும் போலயே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடிப்பில் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விஷால்31.

‘குள்ள நரிக்கூட்டம்’,‘தேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய து.பசரவணன், “எது தேவையோ அதுவே தர்மம்” என்கின்ற குறும்படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் தான்  விஷால் பிலிம் ஃபாக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் விஷால்-31 திரைப்படத்தை து.ப.சரவணன் இயக்கி வருகிறார்.

அதிகார பலம் படைத்தவர்கடை எதிர்ககாள்ளும் ஒரு சாமானியனின் கதையை மையக் கதையாக வைத்து உருவாகும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, நாயகியாக நடிக்க, மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஸ்ரீகாந்த் படதொகுப்பு பணியை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.மூர்த்தி இப்படத்துக்கு கலை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  ஜூலை 28 வரை விறுவிறுப்பாக நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரியவந்த நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நட்சத்திரம் பாபுராஜ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல திரைப்படமான ஜோஜியில் தம் நடிப்பால் கவனம் ஈர்த்த பாபுராஜ் விஷாலுக்கு வில்லனாக நடிப்பதாக இப்படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நடிகர் பாபுராஜ் இந்த படத்தின் செட்டில் இணைந்திருப்பதால் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கும் என்று தெரிகிறது.

மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாபுராஜ், தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'ஜனா', விக்ரம் நடிப்பில் வெளியான 'ஸ்கெட்ச்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ஜான்சன் PRO.

ALSO READ: தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!

விஷால் 31 வில்லன் Malayalam actor Baburaj vishal31 villain

People looking for online information on Johnson, Vishal31 Villain VFF will find this news story useful.