30 YEARS OF VIJAYISM: உரம் போட்டு வளர்த்த ‘தீ’.. வாரிசு படத்தின் அனல் பறக்கும் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 30 வருடங்கள்  ஆகிறது.

Advertising
>
Advertising

இதனை முன்னிட்டு வாரிசு படக்குழு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.   விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தீ தளபதி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார்

இந்நிலையில் தீ தளபதி என்ற பாடலுக்காக  தளபதி என்ற வாசகம் நெருப்பில் எழுதப்பட்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் விஜய் காட்சியளிக்கிறார். பின்னணியில் நெருப்பு சூழ்ந்த நிலையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags : Vijay, Varisu

தொடர்புடைய இணைப்புகள்

30 Years Of Vijay Varisu Vijay New Poster Thee Thalapathy

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.