இயக்குநர் பாக்யராஜின் ராசுக்குட்டி படம் வெளியாகி 30 வருடம் ஆனதை அடுத்து, பாக்யராஜின் உதவி இயக்குநரும் நடிகருமான ஜெகன், நடிகை ஐஸ்வர்யா மூவரும் அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியை கொண்டு ஒரு ரீகிரியேஷன் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
Also Read | போடு..! விஜய்யின் வாரிசு Intro Song பாடப்போவது இந்த இசையமைப்பாளரா..?
வைரலான இந்த வீடியோவை தொடர்ந்து நடிகர் ஜெகன் தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், தன் சினிமா வாழ்க்கை குறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசிய நடிகர் ஜெகன், “எம்ஜிஆர் உட்பட பலரும் கஷ்டப்பட்டு தான் வந்தார்கள். சத்யராஜ் சாரெல்லாம் பின்னால் நின்று, கவனித்தக்க கேரக்டர் பண்ணி, அப்படி ஒவ்வொரு படியாக வந்தார். எனக்கும் அப்படித்தான். ஆனால் நான் இயக்குநர் ஆக முயற்சித்தேன். எனக்கும் நடிப்பிக்கும் சம்மந்தமே இல்லை. டைரக்டருக்கு மேல் எனக்கு கோவம் வந்துவிடும். ஆனால் அந்த நேரத்தில் டைரக்டர் என்னை ராசுக்குட்டி படத்துக்காக, படம் முழுவதும் செம்புலி எனும் காமெடி கேரக்டருக்காக என்னை நடிக்க சொன்னார். நீச்சல் தெரியாதவனை குளத்துக்குள் தள்ளிவிடுவது போல பண்ணினார். நான் அதற்கு லாயக்கா என கூட தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நிறையவே ஆய்வு பண்ணி வைத்திருந்ததாக சொன்னார். ” என குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “நடிகர் இளவரசு சார் கேமரா மேனாக இருந்தார். ஆனால் நடிகனான பிறகு பிரபலமானார். அதை அவரே சொன்னார். மனோபாலா சாரும் அப்படித்தான். நான் எங்கள் இயக்குநரிடம் வெளியே வந்திருந்து 2 படம் பண்ணியிருந்தாலும் 2 படம் பண்ணியிருப்பேன், அதன் பிறகு காணாமல் போயிருப்பேன். மணிரத்னம் சார் பொன்னியின் செல்வன் பண்ணினார். அது பழைய கால கதைதான்.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல சின்ன படங்கள் நன்றாகவும் இருக்கின்றன. தர்மதுரை போன்ற கதை எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்டேட் என்று நாம் எதையும் சொல்ல முடியாது. சினிமா என்பது கற்பனை துறை என்பதால், ஒரு நல்ல கதை பண்ண நினைத்தால், எந்த வயதிலும் பழைய டைரக்டர்களும் படம் பண்ணுவார்கள். பாக்யராஜ் சாரும் பல தற்கால படங்களை பார்த்துதான் வருகிறார். அதுகுறித்து பேசுவார்.
என் வீட்டை பொறுத்தவரை, என் மனைவி நான் டைரக்டராக வேண்டும் என விரும்பினார். என்னுடைய ஜூனியர்கள் இரண்டு முன்று பேர் வேலை கற்றுக்கொண்டு சத்யராஜ் சார் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கினார்கள. என்னப்பா இது, உங்கள் அசிஸ்டண்ட்கள் டைரக்டர் ஆகிவிட்டார்கள் என என் மகள்கள் கேட்கவே செய்தார்கள். ஒரு பட்ட படிப்பு படித்து ஒரு வேலை செய்வது வேறு. ஆனால் சினிமா வேறு. இது ஒரு பரீட்சைதான். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்து இருப்பார்கள். எனவே ஒரு 2 வருடம் சினிமாவில் முயற்சி செய்து சரிவருதா, நம் கனவுகளுக்கான பாதை எப்படி அமைகிறது என பார்த்துவிட்டு உடனே சரிவந்தால் தொடருங்கள், இல்லையென்றால் வேற வேலையை பாருங்கள் என்றுதான் இன்றைய படித்த இளைஞர்களுக்கு நான் சொல்வேன்” என கூறினார்.
Also Read | “வேலை செய்றத தடுக்குறாங்க..” செல்லம்மா சீரியலை விட்டு விலகிய பாக்கியலட்சுமி ஜெனி!