இந்த ஸ்பெஷல் தினத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 3 படங்கள் - செம ஹாட் அப்டேட் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளதன் காரணமாக திரைத்துறை சிக்கலில் உள்ளது. இதனையடுத்து சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் கடந்த ஒருவார காலமாக பரபரப்பாக பேசப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் சூர்யாவின் முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திரைத்துறையினரிடையே இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர்களது கருத்துக்களில் இருந்தே அறிய முடிந்தது. இந்த பரபரப்பு அடங்கு முன்னரே மேலும் மூன்று படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஃபகத் ஃபாசிலின் 'சி யூ சூன்' ( C U Soon ) செப்டம்பர் 1 ஆம் தேதி அமேசான் பிரைமிலும், 'மணியரயிலே அசோகன்' (Maniyarayile Ashokan) ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸிலும், 'கிலோ மீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்' படம் ஏசியா நெட் டிவி மற்றும் ஓடிடியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

3 top films to release via OTT this Onam ft Faahadh Faasil | பண்டிகை தினத்தை முன்னிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 3 படங்கள்

People looking for online information on Fahadh Faasil, OTT will find this news story useful.