3 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ள பிரபல அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளரான ராபர்ட் ரிச்சர்ட்சன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுடன் உரையாடினார்.
ஹைதராபாத் வந்திருக்கும் ராபர்ட் ரிச்சர்ட்சன், அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை விசிட் செய்துள்ளார். அப்போது, இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரத்னவேலுவுடன் உரையாடிய ரிச்சர்ட்சன், தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் க்ரீன் ஸ்க்ரீனுக்கு பதிலாக சிஜி பிளேட்ஸ் பயன்படுத்தி கிராபிக்ஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார். ரத்னவேலுவின் இந்த தனித்துவமான முயற்சி திரைத்துறையினரிடம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், 3 முறை ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிவ் ஸ்டோனின் ‘JFK', மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ‘தி எவியேட்டர்’, ‘ஹுகோ’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக ஆஸ்கரில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை வென்றுள்ளார்.
தற்போது உலக சினிமா ரசிகர்களின் பிரியமான அமெரிக்க இயக்குநர் குவென்டின் டொரண்டினாவின் 9வது திரைப்படமான 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படத்திலும் ராபர்ட் ரிச்சர்ட் பணியாற்றியுள்ளார்.