நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் இந்த 2022 இல் மட்டும் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ள விஷயம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Also Read | பேரிழப்பு.. "அவரு கூட 3 படம் நடிச்சது".. நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கம்.!
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். கிருஷ்ணா, நடிகராக மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில்தான், நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் இந்த 2022 இல் மட்டும் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து பலரும், தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் இந்த தொடர் இழப்புக்கு ஆறுதல்களை தெரிவித்து நம்பிக்கை வார்த்தைகளை மொழிந்துவருகின்றனர்.
ஆம், முன்னதாக கடந்த 2022 ஜனவரி மாதம் நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும், மூத்த நடிகர் ஜி. கிருஷ்ணாவின் மகனுமான நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த அவரது வயது 56. தன் தந்தையோடு குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர்பல படங்களில் நடித்திருந்தார்.
இதை அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் தாயாரும், தற்போது மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் (மகேஷ் பாபுவின் தந்தை) மனைவியுமான இந்திரா தேவி இதே 2022-ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உயிரிழந்தார். உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை மகேஷ் பாபுவின் குடும்பம் சந்தித்துள்ளதை அடுத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபுவுக்கு திரை உலகினரும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!