நடிகர் விஷால் கடைசியாக ‘சக்ரா’ திரைப்படத்தில் தோன்றினார்.
இந்த ஆண்டின் தொடகத்தில் திரையரங்கில் இந்த படம் வெளியானது. புதுமுக இயக்குநர் MS ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனை அடுத்து, விஷால்30 படத்தில் விஷால் நடிக்கத் தொடங்கினார். 'எனிமி' என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க, ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார்.
இதனைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம், ‘விஷால் 31 - நாட் எ காமன் மேன்’. து.ப.சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தில் டிம்பிள் ஹெய்தி கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிப்பார் என்று சமீபத்தில் தெரியவந்தது.
இந்நிலையில் தான், விஷால்31 படத்துக்கு முன்னதாக ‘போரஸ்’ என்கிற பண்டைய கால ராஜாவின் பெயரை அடிப்படையாகக் கொண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, இந்த படத்துக்கு ‘வீரமே வாகை சூடும்’ என்று பெயரிட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தலைப்புடன் கூடிய FirstLook போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், அதே ஜூலை 15-ஆம் தேதி எனிமி படத்தின் டீசர் வெளியாகும் என்றும், அதே ஜூலை 15-ஆம் தேதி ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டாக.. ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இவை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருக்கலாம்.