BIGG BOSS ULTIMATE TAMIL LIVE: "இவங்க போறத தாங்க முடில" - கதறும் ரசிகர்கள்.. 2வது ELIMITATION-ஐ அறிவித்த கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 13, பிப்ரவரி, 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் அல்டிமேட்

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்தவாரம் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த பேச்சுகள் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நீடித்து வந்தன. அதன்படி தற்போது பிரபல நடிகை சுஜா, பிக்பாஸ் நிகழ்ச்சி அல்டிமேட்டிலிருந்து 2வது ஆளாக எலிமினேட் ஆகியுள்ள நிகழ்வு நடந்துள்ளது. 

சுஜா வருணி

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் ஹார்ட் லைக் கொடுக்கும் டாஸ்கில் பேசியிருந்த சுஜா, “ஒருத்தங்க அடிபட்டு நொந்து போய் உக்காந்துருக்குற நேரத்துல அப்படி ஒரு மருந்தாக சுருதி இருப்பதாக குறிப்பிட்டவர், அது என்ன பிணைப்பு என தெரியவில்லை!” என்று கூறி சுருதிக்கு ஹார்ட் கொடுத்திருந்தார்.

கேப்டன் ...

இந்நிலையில் அவருடைய எலிமினேஷன் குறித்து பேசும் ரசிகர்கள் பலரும், “முதல் சீசனில் சுஜா கேப்டன் ஆகாமல் போனது குறித்து வருத்தப்பட்டார். ஆனால் அப்போது விட்டதை இந்த சீசனில் பிடித்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகிறார் என்பதை தாங்கிக்க முடியவில்லை”, “கேப்டனாய் இருப்பதை விட, பார்ஷியாலிட்டி பார்க்காத ஒரு ஹவுஸ்மேட்டாய் இருப்பதுதான் முக்கியம்”, “பிக்பாஸ் வீட்டை விட்டு நீங்கள் போனாலும், மக்களின் அன்பை பெற்றுள்ளீர்கள்” என்று பேசியுள்ளனர்.

ஐட்டம்னு சொல்லாதீங்க

பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகை சுஜா வருணி, தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, என்கிற சுஜாவின் கருத்து மிகவும் பரவலானது. அதிலும் குறிப்பாக அனிதா கேட்கும்போது,  “ஜெயில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஐட்டம் பாடல் இருக்கா?” என கேட்க, அதற்கு சுஜா அனிதாவிடம், “நீங்கள் என்ன சொல்றீங்க?”.. என சொல்ல, அனிதா என்னென்று வினவுகிறார்.

அப்போது சுஜா “அதான். நீங்கள் சொல்ற அந்த ஒரு வார்த்தை? அந்த பாடலில் இடம் பெறும் அந்த ஆர்டிஸ்ட்டை அப்படி அந்த பெயரால் குறிப்பிட தேவையில்லை.. அப்படி சொல்லாதீங்க. அவங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கு.” கூறியிருந்தார்.

24 மணிநேரமும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இளையராஜா இசையில் பிரஜன் நடிக்கும் புதிய படம்.. யுவன் வெளியிட்ட First Look! ஹீரோயின் யாரு?

தொடர்புடைய இணைப்புகள்

2nd elimination Kamalhasan announced bigg boss Ultimate Live

People looking for online information on BBUltimate, BBUltimate Tamil, Bigg boss Live, Bigg Boss OTT, Bigg Boss Ultimate, Bigg boss ultimate HD, Bigg boss Ultimate Live, Bigg boss Ultimate Live HD, Bigg Boss Ultimate Tamil will find this news story useful.