சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பல திரைப்படங்கள் மோட்டிவேஷனல் திரைப்படங்களாக இருந்ததை மறக்க முடியாது.
தொடர்ச்சியாக படிக்காதவன், தர்மதுரை, பணக்காரன், முத்து, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா திரைப்படங்கள் ரஜினியின் பொன்னான நாட்களை நமக்கு நினைவூட்டும் திரைப்படங்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
இவற்றுள் முக்கியமான திரைப்படம் அண்ணாமலை என்று சொல்லலாம். காரணம் அனைத்து எழுச்சி கதைகளுக்கும் அண்ணாமலை திரைப்படம் ஒரு சரியான மாடல் என்பதுதான். நட்பு, நம்பிக்கை, பழி, துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, எழுச்சி, வெற்றி என்கிற பாதையில் பயணிக்கும் அபூர்வ ஃபார்முலா அண்ணாமலையில் கைகொடுத்தது.
ஏறக்குறைய இன்றுவரை திரைப்படங்களை ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஃபார்முலாவை அண்ணாமலை திரைப்படத்தில் மாடலாக வைத்து உருவாக்க முடியும். குறிப்பாக அண்ணாமலை திரைப்படத்தில் வரும் அந்த இன்டர்வெல் பிளாக் என்பது பக்கா கமர்சியல் திரைப்படத்துக்கான தனித்துவமான காட்சி என்று சொல்லலாம்.
நண்பனிடம், “இந்த நாளை குறித்து வைத்துக் கொள்.. நீ எனக்கு செய்ததையே உனக்கு நான் திருப்பி செய்து உன்னை வென்று உன்னை விட பெரிய ஆளாக உயர்வேன்! அப்படி இல்லை என்றால் என் பெயர் அண்ணாமலை இல்லை!” என்று சவால் விடும் அந்த காட்சியை கண்டால் இப்போதுவரை நமக்கு மெய் சிலிர்க்கும்.
ஆம் அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் #29YearsOfAnnamalai என்கிற ஹேஷ்டேகின் கீழ் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் சினிமாவின் வேறலெவல் இண்டர்வல் பிளாக் அமைந்திருக்கும் மிக முக்கியமான திரைப்படம் அண்ணாமலை என்று பலர் புகழ்ந்து இந்த திரைப்படங்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ALSO READ: ஸ்டார்ட் மியூசிக்.. "தளபதி65" பட ஹீரோயின் பதிவிட்ட செம்ம அப்டேட்! வைரல் ஃபோட்டோ!