விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.

Also Read | கௌதம் & மஞ்சிமா திருமணம்.. இரண்டு குடும்பமும் ஒரே மேடையில்.. வைரலாகும் புகைப்படம்!
இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது.
இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார்.
பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார் கோபி.
இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்கியலக்ஷ்மி இருக்கும் வீட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள வீட்டுக்கு குடியேறியுள்ளார் கோபி.
இந்நிலையில் குழந்தை இனியா சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாக தகவல்கள் பாக்யா & கோபிக்கு நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. உடனடியாக பள்ளிக்கு வரும் கோபி, இனியா குறித்து ஆசிரியர்களிடம் விசாரிக்கிறார். இதற்கிடையில் பாக்யாவும் பள்ளிக்கு வருகிறார்.
இச்சூழலில் இனியா இருக்கும் வகுப்பறைக்கு செல்லும் கோபி, இனியாவிடம் பேசுகிறார். வாகன விபத்து குறித்து இனியாவிடம் கோபி விசாரிக்கிறார். பின்னர் பாக்யாவுக்கு தெரியாமல் இனியாவை தனது காரில் அழைத்து கோபி சென்று விடுகிறார். இதை கவனித்த பாக்யா கோபியின் காரை துரத்தி ஓடுவது போல முன்னோட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Also Read | 23 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த கடன்.. நடிகை மும்தாஜ் செயலால் நெகிழ்ச்சியான பார்த்திபன்!