ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் டைட்டானிக் (Titanic). லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ள இப்படத்தில் ஆடம்பரப் பயணிகளுக்கான டைட்டானிக் கப்பலில் அனைத்து வர்க்கத்தினரும் பயணிக்க, இதில் ஹீரோ ஹீரோயின்களுக்கு இடையில் ஏற்படும் வர்க்க முரண் தாண்டிய காதல் ஜெயித்ததா? என்பதே கதை.
Also Read | நயன்தாரா நடிக்கும் 'CONNECT'.. தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்
இதனிடையே பயணத்தின் போது பனிப்பாறையுடன் மோதும் டைட்டானிக், கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்க, உயிருக்கு போராடும் வேளையில் மனிதர்களுக்கு இடையில் நிகழும் பனிப்போர், மனமாற்றம், தடுமாற்றம், ஈகோ, வஞ்சம், நெகிழ்ச்சி, உறவு, காதல் என பல உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டில் உண்மையிலேயே மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலின் விபத்து சம்பவத்தில் பலியான ஆயிரக்கணக்கான பயணிகளின் சோகக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது. அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்ட இந்த படப்பிடிப்பு காட்சிகள் இப்படம், அதுவரை அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டது.
இப்படம் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி பல விருதுகளை குவித்தது. வசூலையும் பலமடங்கு குவித்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்திலான அவதார் 2-ஆம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் அண்மையில் (டிச 16) வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படத்தின் இறுதிக்காட்சிகளிலும் கப்பலில் இருந்து ஹீரோவும் அவரது குடும்பமும் சிக்கி, கடல் நீரில் போராடி தப்பிக்கும் காட்சிகள் டைட்டானிக் காட்சிகளை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. வெளியான உருக்கமான 3-வது சிங்கிள் Glimpse வீடியோ!