25 YEARS OF IRUVAR: இருவர் படத்துக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இருவர் படம் வெளியாகி இன்றுடன் 25 வருடம் ஆகிறது.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் பட வெளியீட்டின் போது கவனிக்கபடாமல் பின்னர் ரசிகர்களின் பேராதரவினால் கல்ட் அந்தஸ்து பெறும் படங்கள் ஏராளம். அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் சில உண்டு. அவை, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, ராவணன், பில்லா 2, ஓரம் போ, மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், ஆளவந்தான், ஹே ராம், இருவர் போன்ற படங்கள் முக்கியமானவை. இருவர் படம் 1997 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது, இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் மோகன் லால், ஐஸ்வர்யா ராய், கௌதமி, பிரகாஷ் ராஜ், நாசர் என பலர் நடிப்பில், இசைப்புயல் A.R. ரகுமான் இசையில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ISC ஒளிப்பதிவில் இந்த படம் உருவானது. 

தமிழகத்தின் பெரும் அரசியல் ஆளுமைகளான இருவர், அதில் ஒருவர் மோகன் லால், மற்றொருவர் பிரகாஷ் ராஜ். மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் எம். ஜி. ஆர் மற்றும் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்வின் சில சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட படமாக இருவர் படம் உருவானது. ஆனந்தனாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக, முதலமைச்சராக மோகன்லாலும்,  அரசியல்வாதியாக முதலமைச்சராக தமிழ் செல்வன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜூம் நடித்திருப்பர். நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது முதல் படம். இரட்டை வேடங்களில் ஆனந்தனின் இறந்த முன்னாள் மனைவியாகவும், இளம் நடிகையாகவும் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். 

ஒரு கதையை சொல்ல ஒளிப்பதிவு நுணுக்கங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் இருவர்  திரைப்படத்தை தவிர வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு ஷாட்டும் திரைக்கதையை நேர்த்தியாகவும் அதிநுணுக்கமாகவும் ரசிகர்களுக்கு கடத்த படமாக்கப்பட்டு இருக்கும். இருவர் படத்தின் Aspect Ratio  முதல் Shot Division ஐ மட்டும் தனியாக பகுப்பாய்வு செய்தாலே பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக ASPECT RATIO 1997 ஆம் ஆண்டில் 16:9 என்று இருந்தது. இப்போதும் 16:9 தான் பல படங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் 1960-70 களில் ASPECT RATIO 4:3 என்றே இருந்தது.  இருவர் பட  கதை நடக்கும் காலகட்டம் 60-70-80 என்பதால் படத்தின் ASPECT RATIO 4:3 ல் எடுக்கப்பட்டிருக்கும். 

அதே போல கேமரா கோணமும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற உயரிய கதாபாத்திரங்களுக்கு LOW ANGLE அமைக்கப்பட்டிருக்கும், படம் பார்க்கும் ரசிகன் இந்த கதாபாத்த்ரங்களை அன்னாந்து பார்த்து, இந்த கதாபாத்திரங்களின் மேன்மை தனமையை விளக்க உளவியல் நுட்பம் இதில் பயன்படுத்திருக்கும்.  மேலும் மோகன்லாலின் வீழ்ச்சியை குறிக்க Top High Angle பயன்படுத்தப்பட்டிருக்கும்.

 

படத்தின் பல ரோலிங் ஆங்கிளில் ஒளிப்பதிவு விதியான 180 டிகிரி விதி மீறப்படாமல் இருக்கும், முக்கியமான மேடைப் பேச்சுக்கள் அடங்கிய காட்சிகளில் பிரேம்கள் 1/4, 1/2 விகிதங்களில் பிரிக்கப்பட்டு இருக்கும்.  இந்த படத்திற்காக ஒளிப்பதிவு மற்றும் சிறந்து துணை நடிப்பிற்காக முறையே சந்தோஷ் சிவன், பிரகாஷ் ராஜ் தேசிய விருதை வென்றனர். பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மம்முட்டி. ஆரம்ப போட்டோ ஷூட் முடிந்து பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

25 Years Of Iruvar Magnum Opus of Tamil Cinema

People looking for online information on A R Rahman, Aishwarya rai, Iruvar, Karunanidhi, Mani Ratnam, MGR, Mohan Lal, Santhosh Sivan will find this news story useful.