செம்ம… இணைந்து வாழும் 23 ஆண்டுகள்.. அஜித் - ஷாலினியின் UNSEEN PICS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை ஷாமிலி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

வலிமைக்குப் பின்….

அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. அதன் பின்னர் அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணியில்  வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தனது குழந்தைகளோடு திரையரங்குக்கு சென்று பார்த்தார். அப்போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அஜித் 61, அஜித் 62….

வலிமைக்கு அடுத்து நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அஜித் 62 ஆகிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாக மிகுதியில் வைத்திருக்கின்றன.

அஜித் மகனின் பிறந்தநாள்

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் குடும்பத்தோடு நடத்திய விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன. அந்த கொண்டாட்டத்தில் அஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஷாலினியின் சகோதரி ஷாம்லி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஷாம்லி பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில் தற்போது நடிகையும், ஷாலினி அஜித்தின் சகோதரியுமான ஷாம்லி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் கலர்புல் ரொமாண்டிக் புகைப்படமான அதில் ஷாம்லி ’சேர்ந்து பயணிக்கும் 23 ஆண்டுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித் மற்றும் ஷாலினிக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

23 years love life Ajith Shalini latest unseen pic

People looking for online information on Ajith, Shalini Ajith will find this news story useful.