மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த அமீர், ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றார்.
Also Read | RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக் ஷீப்..!
பின்னர் யோகி திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரபலமான அமீர், வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நடிகராகவும் ரீச் ஆனார். தற்போது இவர் உயிர் தமிழுக்கு என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இயக்கி தயாரிக்கிறார்.
அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அமீர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜயன் பாலா மற்றும் பாலமுரளி வர்மன் வசனம் எழுதும் இப்படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். இதேபோல் இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெற்றிமாறன் & தங்கம் இணைந்து கதை எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில், இயக்குநராக அமீர் அறிமுகமான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இயக்குநர் அமீர் ஒரு உருக்கமான நெகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
All photos copyrighted © by their respective owners
அதில் இயக்குநர் அமீர், “சாதாரணமாக மதுரையில் இருந்த அமீர் இன்றைக்கு அறியப்பட்ட வாழ்த்தப் பெற்ற ஒரு ஆளாக உங்கள் முன் நிற்பதற்கான தொடக்கம்- திரைக்கலைஞன் என்னும் அடையாளம் தான். அந்த அடையாளத்தைப் பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மெளனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு.கணேஷ் ரகு மற்றும் திரு.வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், நான் இயக்குனராவதற்கு உறுதுணையாக இருந்த நடிகர் திரு.சூர்யா அவர்களுக்கும், என்னோடு பயணித்து வெற்றிக்கு கரம் கொடுத்த ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி மற்றும் திரு.யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு என் நன்றிகள்.!
என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 20 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும், குறிப்பாக "மௌனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.! என்னாளும் அன்போடும், மாறாத நன்றியோடும் அமீர்” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | 2 டிகிரி குளிர்ல இப்படி ஒரு டிரெஸ்ஸா..? நெட்டிசன்களின் கமெண்டுக்கு யாஷிகா பதிலடி! Yashika Ananad