அந்த சூப்பர்ஹிட் சைக்கோ த்ரில்லர் படத்தின்., SECOND PART உருவாகிறதா..?! - OFFICIAL தகவல் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை பற்றி நடிகர் மனோஜ் பாரதி பதிவிட்டுள்ளார். 

1978-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சிகப்புரோஜாக்கள். பாரதிராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகை ஶ்ரீதேவி ஹீரோயினாக நடித்தார். ஹாலிவுட் ஸ்டைலில் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். 

இதனிடையே தற்போது சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், பாரதிராஜாவின் மகன் மனோஜ்.கே.பாரதி இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மனோஜ் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், ''சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. அவை உண்மையல்ல. அதுபற்றி ஒரு முடிவு ஏற்படும்போது, நானும் அப்பாவும் முறையான அறிவிப்பை வெளியிடுவோம். நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிகப்புரோஜாக்கள்-2 பற்றி பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

கமலின் சிகப்புரோஜாக்கள் 2 பற்றி தகவல் | Official Statement on the remake of kamal barathiraja's sigappurojakkal part 2

People looking for online information on Bharathiraja, Kamal Haasan, Manoj Bharathiraja, Sigappurojakkal 2 will find this news story useful.