மிஷ்கினின் பிசாசு-2.. ஆண்ட்ரியாவின் ஒரிஜினல் லுக் யார் தெரியுமா.?!! போஸ்டரில் இருந்த ரகசியம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படத்தில் இவர் நடிக்கிறார். நேற்று இவரது பிறந்தநாள் சர்ப்பரைஸாக படத்தில் இருந்து ஸ்பெஷலாக ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது இந்த போஸ்டர் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த போஸ்டரில் வெளியாகியுள்ள ஆண்ட்ரியாவின் லுக், அவரது பாட்டியின் புகைப்படத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2015-ஆம் ஆண்டில் இதே புகைப்படத்தை ஆண்ட்ரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பாட்டி தோற்றத்தை வைத்து, க்ளாசிக்காக ஆண்ட்ரியாவின் லுக்கை வடிவமைத்து ஆச்சர்யம் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மிஷ்கின் பிசாசு 2 போஸ்டர் ரகசியம் | Mysskin andrea's pisasu 2 poster secret revealed

People looking for online information on Andrea Jeremiah, Mysskin, Pisasu 2 will find this news story useful.