'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் அடுத்த படத்தில் 2 நடிகர்கள்?.. இவர் தான் வில்லனா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தினை பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆர்.ஜே.பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' (2020) படத்தில் கடைசியாகக் காணப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, 'அவள்' பட புகழ்,  மிலிந்த் ராவ் இயக்கிய 'நெற்றிக்கண்' என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிரபலமான OTT தளமான டிஸ்னி + ஹாட் ஸ்டார் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பேஷன் ஸ்டுடியோவுடன் நயன்தாரா இரண்டு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின. அபிஷேக் பிக்சர்ஸூடன் இணைந்து இந்த படங்களை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இப்போது, ​​அதில் நயன்தாரா நடிக்கும் 2 படங்களில் முதல் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி நயன்தாராவுக்கு வில்லனாக ஒரு முக்கிய நடிகரும், முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய நடிகரும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக வில்லனாக ‘நான் ஈ’ படத்தின் வில்லன் நடிகரான சுதீப் நடிப்பதற்காக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் அறிவிக்கப்படுவதற்காக எதிர்பார்க்கப்படுகிறது.

பேஷன் ஸ்டுடியோஸ் சீதக்காதி (2018), பெட்ரோமேக்ஸ் (2019), பென்குயின் (2020), அந்தகாரம் (2020) ஆகியவற்றை சமீபத்தில் தயாரித்திருந்தது. இவை தவிர ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதேபோல் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

2 lead male actors in Nayanthara next film passion studios

People looking for online information on Nayanthara, Passion Studios will find this news story useful.