தனி ஒருவன் 2-வின் மாஸ் அப்டேட்..! - பிரபல நடிகருக்கு இயக்குநர் கொடுத்த பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதன் இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ளார். 

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன். குறிப்பாக இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் மோகன் ராஜா. 

இந்நிலையில் தனி ஒருவன் திரைப்படம் ரிலீஸாக இன்றோடு 5 வருடங்கள் நிறைவடைகிறது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன், இயக்குநர் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டார். மேலும் அவர் தனி ஒருவன்-2 பற்றியும் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மோகன் ராஜா, ''தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு தகவல்.., தனி ஒருவன் 2 பற்றி மாஸ் அப்டேட் விரைவில் வெளியாகும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனி ஒருவன்-2 பற்றி இயக்குநர் தகவல் | Director Mohan Raja opens on Jayam Ravi's Thani Oruvan 2

People looking for online information on Jayam Ravi, Mohan Raja, Thani Oruvan, Thani Oruvan 2 will find this news story useful.