EXCLUSIVE - விஜய்யுடன் மீண்டும் துப்பாக்கி-2..?! - வில்லன் வித்யூத் ஜம்வால் பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வித்யுத் ஜம்வால் தமிழ் திரைப்படங்களில் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

அஜித்தின் பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இதை தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கி இவர் பிரபலமானார். இதையடுத்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இவர். 

இந்நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் தமிழ் திரைப்படங்களில் நடித்த தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கி-2வில் நடிக்கும் வாய்ப்பு பற்றி கேட்டபோது, ''கதைப்படி, நான் க்ளைமாக்ஸில் இறந்துவிடுவதாக காட்டுவார்கள். ஆனால், மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன். அவர்கள் எனக்கு செய்துள்ளது மிகப்பெரிய விஷயம்'' என தெரிவித்தார்.

மேலும் நடிகர் அஜித்துடன் பில்லா-2, சூர்யாவுடன் அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்து கொண்டார் வித்யுத் ஜம்வால். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோவின் தொகுப்பு இதோ., 

 

EXCLUSIVE - விஜய்யுடன் மீண்டும் துப்பாக்கி-2..?! - வில்லன் வித்யூத் ஜம்வால் பளீச். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யுடன் துப்பாக்கி-2 பற்றி வித்யுத் ஜம்வால் | Actor Vidyut Jammwal opens on Vijays Thuppakki 2 and about ajith surya

People looking for online information on Ajith Kumar, Vidyut Jammwal, Vijay will find this news story useful.