ரிலீசான 'யானை' படத்தின் ROMANTIC சிங்கிள் பாடல் எப்படி இருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அருண் விஜய் மற்றும்  இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியீடு செய்யப்பட்டது.

1st single from Hari direction Arun Vijay Starrer "Yaanai"
Advertising
>
Advertising

நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான  பணிகள் நடந்து வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி யானை பட பற்றிய அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.  

1st single from Hari direction Arun Vijay Starrer

இந்நிலையில் இன்று ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிட்டனர்.  மாலை 5 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. ஏலம்மா ஏலே எனும் இந்த பாடலை ஜி வி பிரகாஷ் இசையில் சினேகன் எழுதி உள்ளார்.

சாய்னா நேவாலை பாலியல் ரீதியாக திட்டிய விவகாரம்: சித்தார்த் மீது POLICE வழக்குப் பதிவு

இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.

அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

One Year of MASTER: கொல மாஸான BTS புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! செம டிரெண்டிங்

இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கியுள்ளன.

இணையத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை குவித்ததுடன், 2 மில்லியன் பார்வைகளை குறைந்த நேரத்தில்  கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது.

இசை:G.V.பிரகாஷ்குமார்,
ஒளிப்பதிவு:கோபிநாத்,
எடிட்டிங்:அந்தோணி,
ஆர்ட்:மைக்கேல்,
ஸ்டண்ட்:அனல் அரசு,
நடனம்:பாபா பாஸ்கர்,தினா,
CEO:G.அருண்குமார்,
இணை தயாரிப்பு:சந்தியா கிஷோர்குமார்.
நிறுவனம்:டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பு:வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்.

ரிலீசான 'யானை' படத்தின் ROMANTIC சிங்கிள் பாடல் எப்படி இருக்கு தெரியுமா? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

1st single from Hari direction Arun Vijay Starrer "Yaanai"

People looking for online information on Arun Vijay, அருண் விஜய், இயக்குநர் ஹரி, யானை, Hari, Yaanai, Yelamma Yela Song will find this news story useful.