"REAL WINNER".. "இந்த வருசத்தோட முதல் BLOCKBUSTER துணிவு தான்".. போனிகபூர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Advertising
>
Advertising

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


இந்நிலையில் துணிவு படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆவதை ஒட்டி தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "2023 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் துணிவு. ரியல் வின்னர்" என ட்வீட் செய்துள்ளார். Blockbuster என்பது இமாலய வெற்றி பெற்று அதிக லாபம் தந்த படங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும்.

"REAL WINNER".. "இந்த வருசத்தோட முதல் BLOCKBUSTER துணிவு தான்".. போனிகபூர் ட்வீட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

1st Blockbuster of 2023 Thunivu Boney Kapoor Tweet

People looking for online information on Ajith Kumar, AK, Boney kapoor, Thunivu will find this news story useful.