பெங்களூர் பழைய புத்தக கடையில்.. 1950-ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பிரதிகள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'PS1' படத்தின் இறுதிக்கட்ட இசையமைப்பு பணிகள்.. A.R.ரஹ்மான் கொடுத்த சூப்பர் அப்டேட்!

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தையொட்டி, பலரும் பொன்னியின் செல்வன் நாவலை தேடித்தேடி படிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் பெருமகிழான் எனும் இணையவாசி ஒருவர், தம்முடைய வலைப்பதிவில், “பொன்னியின் செல்வன் கதை முதல்முறையாக 29/10/1950 ஆண்டு கல்கி இதழில் தொடராக வெளியானது. அப்படி வாரவாரம் வெளியான கதையை யாரோ ஒரு நன்றிக்குரியவர் பைண்டிங் செய்து முழுப் புத்தகமாக உருவாக்கியுள்ளார்.

அந்தப் புத்தகம் பலநபர்களைக் கடந்து 16/5/1977 அன்று T.N.காயத்ரி என்பவரிடம் சேர்ந்துள்ளது. அதன் பின் பல தலைமுறைகளைக் கடந்து, 2013-ல்,பெங்களுரில் ஒரு பழைய புத்தக்கடையில், இந்த புத்தகம் என் கை சேர்ந்தது. மீண்டும் ஒரு முறை சோழ தேசம் பயணம்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

பலரும் கல்கி இதழில் தொடராக வெளியான பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்களாக இருந்துள்ளனர். இப்போதைய 90ஸ், 2கே கிட்ஸ்களும் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை, படம் வெளியாவதற்குள் வாங்கி படித்துவிடும் தீவிர ஆர்வத்தில் உள்ளனர். இதேபோல், இன்னும் பலர், நேரடியாக படத்தினை முதலில் பார்த்துவிட்டு, பின்னர் நாவலை படிக்கவும் ஆர்வமாய் உள்ளனர்.

Also Read | ஜெண்டில்மேனில் தொடங்கிய சகாப்தம்.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!

தொடர்புடைய இணைப்புகள்

1950s Ponniyin Selvan magazine copies viral pic

People looking for online information on Jayam Ravi, Kalki, Karthi, Maniratnam, Ponniyin Selvan-1, PS1 will find this news story useful.