18 YEARS OF VIRUMANDI: சண்டியர்னு சொல்லாதீங்க சண்டை வரும்.. விருமாண்டி-னு சொல்லுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரை: விருமாண்டி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 வருடங்கள் ஆகிறது.

Advertising
>
Advertising

தொன்மங்கள் திரைப்படமாகும் போது இயல்பாகவே செவ்வியல் நிலைத்தன்மையை அடையும். அந்த வகையில் விருமாண்டி ஒரு கல்ட் கிளாசிக். ரோஷமான் பாணியில் அமைந்த விருமாண்டி திரைக்கதை தமிழில் பல படங்களுக்கு அகத்தூண்டலாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆடுகளம் படத்தின் இறுதி டைட்டிலில் Aadukalam (2011) Filmography என்று Cache by Michael Haneke (2005), Amores Perros by Alejandro Gonzalez (2000), Babel by Alejandro Gonzalez (2006), Powder Keg by Alejandro Gonzalez (2001), பரதனின் தேவர்மகன் (1992), கமல்ஹாசனின் விருமாண்டி (2004), அமீரின் பருத்திவீரன் (2007) படங்களை குறிப்பிட்டு இருப்பார். 

அதே போல கைதி படத்தின் அகதூண்டலாக சிறைச்சாலை சண்டைக்காட்சியில் நாசரின் போலிஸ் உடையை கைதி கமல்ஹாசன் போட்டு போகும் காட்சியே கைதி படத்திற்கான அகத்தூண்டல் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல முறை கூறியுள்ளார். மேலும் பழம்பெரும் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் ஸ்பார்ட்டகஸ் திரைப்படத்தின் சிறைச்சாலை தகர்க்கும் காட்சியே விருமாண்டி படத்திற்கு அகத்தூண்டலாக அமைந்தது தனிக்கதை. கமல்ஹாசனின் விருப்ப படங்களில் முக்கியமானது Spartacus (1960). 

தமிழர்களில் மதுரை மாவட்டத்தில் வாழும் பிரமலை கள்ளர்கள் பற்றி பலப்படங்கள் வந்துள்ளன, குறிப்பாக மதயானைக்கூட்டம், சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் இல்லாத தொன்மக்கூறுகளை விருமாண்டி படம் கையாண்டிருக்கும். பிரமலைக்கள்ளர்களின் குலதெய்வமான மூனு சாமிகளின் அடிப்படையில் விருமாண்டி படத்தினை கமல் எழுதியிருப்பார். விருமாண்டி, பேச்சியம்மாள், மாயன், முருகன், பேக்காமன் என தொன்ம பாத்திரங்களை திரையில் புனைந்திருப்பார். நடப்பு அரசியலில் மரண தண்டனை குறித்தும் மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் 18 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருப்பார். படத்தின் முதல் காட்சியில் கீழ வெண்மணி பற்றிய குறிப்பும் உண்டு. 

சென்சார் போர்டால் A சான்றிதழ் கொடுக்கப்பட்டது, கலாச்சாரம் குறித்து கமல் பேசிய வீடியோ, சண்டியர் பெயர் பிரச்சினை என பல சர்ச்சைகளுக்கும் விருமாண்டி உள்ளானதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

18 Years Of Virumandi Movie Kamal Haasan Master Piece

People looking for online information on Abirami, சண்டியர், விருமாண்டி, Kamal Haasan, Pasupathi, Sandiyar, Virumandi will find this news story useful.