தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.
இதுபற்றி நடிகை ராஷ்மிகா நீண்டதொரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "பதினெட்டு வயதில் இருந்தே எனது வாழ்க்கை மாரத்தான் ஓட்டம் போல தான் இருந்திருக்கிறது. ஒரு ஓட்டத்தை முடித்தவுடனேயே அடுத்த ஓட்டம் ஆரம்பிக்கும். நான் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஆனால் அதை தான் நானும் விரும்பினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இதுவரை இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததே இல்லை. ஸ்கூல் படிக்கும் பொழுதிலிருந்தே ஹாஸ்டலில் தான் இருந்திருக்கின்றேன். எனது பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று நினைத்து அவர்களுடன் போராடி இருக்கின்றேன்.
ஆனால் இப்போது நிலைமை வேறு என் தாய் எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதும், எனது தந்தை என்னிடம் நேரம் செலவழிப்பதும் அதிகரித்தது. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் இரண்டு மாதங்கள் நான் வீட்டில் கழித்த போது மனதுக்கு நிறைவாக இருந்தது ஒரு விஷயம். என் வேலைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. மாறாக என்னை பற்றி மட்டுமே என் பெற்றோர்கள் கவனம் செலுத்தி பார்த்துக்கொண்டனர். குடும்பம் தான் என் வாழ்வின் மகிழ்ச்சியான இடம். வாழ்க்கை இப்படி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.