கொரோனாவுக்கு எதிராக முழு இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அப்படி ஆரம்பம் முதலே மக்களின் சூப்பர் ஹீரோவாக மாறியிருப்பவர் வில்லன் நடிகர் சோனு சுத். மற்ற மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சேர்க்கும் வேலையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அப்படி கேரளாவின் துணி கார்மென்டில் வேலை செய்து வந்த 169 ஒடிசா மாநில பெண்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வழி செய்யுமாறு கைகளை கூப்பியவாறு பரிதாபமாக வீடியோ வெளியிட்டனர். இதனைப் பார்த்த அவர் தன் சொந்த செலவில் விமானம் ஒன்றை வர செய்து 169 பெண்கள் மற்றும் 9 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சேர வழி செய்துள்ளார். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்த மனிதாபிமானம் செயல் அந்த பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.