பொல்லாதவன் 15 வருட கொண்டாட்டம்.. ! பார்ட் 2 க்கு வெயிட்டிங்கா.?.. நடிகை திவ்யா வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'.. படப்பிடிப்பு சென்னையில் இங்க தானா? வைரல் BTS ஃபோட்டோஸ்!

கடந்த 2007 ஆம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் திவ்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் பின்னணி இசையில் ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவானது. ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் இந்த படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் 15வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், நடிகை திவ்யா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வெற்றிமாறன் - தனுஷ் இருவரும் கேக் வெட்டி பரஸ்பரம் கேக் ஊட்டி விட்டனர்.

இந்த நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திவ்யா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "பொல்லாதவன் இன்றுடன் 15 ஆண்டுகள்! வாரணம் ஆயிரம் படத்திற்காக  எடுத்த சிறிய காட்சி வீடியோவை  தனுஷ் பார்த்துவிட்டு  பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகும் வெற்றி மாறன் சாரிடம் தனுஷ் என்னை பரிந்துரைத்தார்.

வெற்றிமாறன் சார், தனுஷ் இருவரையும் நான் அதற்கு முன் சந்தித்து பேசியதில்லை. பின்னர் நான் ஸ்கிரிப்டை தொலைபேசியில் கேட்டேன். 'ஒரு பையன், அவனது பைக் மற்றும் அவனது காதலி' இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பொல்லாதவன் படத்தில் நான் 15வது கதாநாயகி என்பதை பின்னர் தான் அறிந்தேன்.
பொல்லாதவன் படப்பிடிப்பில்தான் தனுஷுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் தற்போது ஒன்றாக நிற்கிறோம்.  நன்றி தனுஷ்! நன்றி வெற்றி மாறன் சார்.

நேற்றைய தினம் படப்பிடிப்பில் நடந்த மகிழ்ச்சியான  நல்ல நினைவுகளை அசைபோட்டோம்!

ஜி வி பிரகாஷின் சிறந்த BGM! அப்போது ஜிவிக்கு வயது 19!
பொல்லாதவன் படத்தின் பார்ட் 2 க்கு ஆவலுடன் உள்ளேன்". என திவ்யா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | "பல ஆண்டுகளாக தொந்தரவு தந்த விஷயங்கள்".. முதல் முறையாக மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

தொடர்புடைய இணைப்புகள்

15 Years Of Polladhavan Celebration Dhanush Divya Vetrimaaran

People looking for online information on 15 Years Of Polladhavan, Dhanush, Divya, Polladhavan, Vetrimaaran will find this news story useful.