VIDEO: "100 படம் நடிச்ச ஹீரோவால கூட..!".. ட்ரெண்ட் ஆகும் ரஜினி பேச்சு.. கொண்டாடும் கார்த்தி ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி பருத்தி வீரனில் அறிமுகமாகி இத்துடன் 14 வருடங்கள் ஆகியுள்ளன. அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

அமீரின் இயக்கத்தில் வெளியான 2007-ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி சுல்தான், உட்பட சுமார் 20 படங்களில் நடித்துவிட்டார். பருத்திவீரனில் கார்த்தி நடித்து இத்துடன் 14 வருடங்கள் ஆகிவிட்டன.
இதனால் #14YearsOfKarthism என்கிற ஹேஷ்டேகில் அவரது ரசிகர்கள் Twitter-ல் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்தி பற்றி ரஜினிகாந்த் பேசிய நிகழ்வு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கார்த்தி, சூர்யா மற்றும் பலர் பங்கேற்ற அந்த நிகழ்வில் பேசிய ரஜினி, “கார்த்தி முதல் படமான பருத்திவீரனிலேயே தூள் கிளப்பிட்டார். அந்த படத்தின் கிளைமேக்ஸில் அவர் நடித்தது 100 படங்களில் நடித்த ஹீரோவால் கூட பண்ணமுடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது கார்த்தி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

14YearsOfKarthism Paruthiveeran Trending கார்த்தி பருத்திவீரன்

People looking for online information on 14YearsOfKarthiSM, Karthi, Paruthi Veeran, Rajinikanth will find this news story useful.