‘சுப்ரமணியபுரம்’ 14 வருஷம்.. ஜேம்ஸ் வசந்தன் நன்றி!!.. கூடவே வைரலாகும் பாடல் பின்னணி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பசங்க, ஈசன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன்.

Advertising
>
Advertising

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. கேரளா ரிலீஸ் உரிமத்தை இவங்க தான் வாங்கிருக்காங்க!

இவர் இசையமைத்த சுப்ரமணியபுரம் படத்தின் பாடல்கள் பெருமளவில் மக்களிடையே ரீச் ஆனது. அந்த படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க, கண்கள் இரண்டாம் உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் பாடலாக அமைந்தது.

இதனிடையே சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, ஜெய், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்தனர்.

இந்த படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் சசிகுமார் அறிமுகமாகி இருந்தார். நடிகை சுவாதி இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தார். படம் வெளியான அந்த ஆண்டின் சிறந்த படமாக பல விருதுகளை அள்ளிக் குவித்தது இந்த படம். நட்பு, காதல், நம்பிக்கை துரோகம், பழி, அதிகார மனநிலை உள்ளிட்ட பல மனோவியல் தன்மைகளை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் வில்லனாக சமுத்திரகனி நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் குறித்து தமது பக்கத்தில் பேசியுள்ள இசையமைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன்,  “14 வருடங்களுக்கு முன் இதே ஜூலை 4, என் வாழ்க்கைக் கனவு நடந்தேறிய நாள். ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியான நாள் கடவுளுக்கும், என் இயக்குனர் சசிகுமாருக்கும், அந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், மக்கள் என்னை இனங்கண்ட ‘கண்கள் இரண்டால்’ பாடலை எழுதிய கவிஞர் தாமரைக்கும், பாடிய தீபா மிரியம் மற்றும் பெள்ளி ராஜுக்கும், அந்தப் பாடலில் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்கும், அதைக் கொண்டாடி என்னை இந்த இடத்தில் அமரவைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜேம்ஸ் வசந்தன் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பேசும் பிரத்தியேக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், தான் மெட்டமைத்து ஒரு பெண் பாடகரை கொண்டு உருவாக்கிய ஒரு நல்ல பாடலை ஒரு தயாரிப்பாளர் பிடிக்கவில்லை என சொன்னதுடன் அதை நிராகரித்தது குறித்தும் பின்னாட்களில் அந்த பாடலை இயக்குநர் சசிகுமார் தமது ஈசன் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டார் என்றும், அந்த பாடல்தான் ஜில்லா விட்டு ஜில்ல வந்த பாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | 2022ல் உலகின் மிகச் சிறந்த 25 திரைப்படங்கள்.. இடம் பிடித்த 4 இந்திய படங்கள்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

14 yrs Subramaniyapuram james vasanthan reveals song backstory

People looking for online information on 14 years of Subramaniyapuram, Ganja Karuppu, Jai, James vasanthan, Sasikumar, Subramaniyapuram, Swathi Reddy will find this news story useful.