"என்ன பக்தி.. அவங்களும் உருகி.. நம்மளையும் உருக வெக்குறாங்களே".. மெச்சும் நடுவர்கள்.. SUPER SINGER 8

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் சிங்கர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல ரியாலிட்டி ஷோக்கள் வெகு மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படக் கூடியவை.

13th Feb 2022 Super Singer Junior 8 devotional round
Advertising
>
Advertising

குக் வித் கோமாளி

சமையல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் சமைத்துக் கொண்டே போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் இருவரும் இணைந்து மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்வார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் வேற லெவலில் நடந்து வருகிறது.

13th Feb 2022 Super Singer Junior 8 devotional round

பிக்பாஸ் நிகழ்ச்சி

இதேபோல் விஜய் டிவியில் கடந்த 5 சீசன்களாக, மிக முக்கியமான, அதே சமயத்தில் விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோவாக விளங்கிவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் இந்த ஐந்து சீசன்கள் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

Also Read: "இது கொழந்த மேல சத்தியம்".. வயித்துல அடிச்சு சபதம் எடுத்த அர்ச்சனா.. அப்ப எல்லாமே நடிப்பா?

சுமார் 100 நாட்கள் பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வாழக்கூடிய இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இறுதியில் வின்னர் யார் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் ராஜூ வெற்றி பெற்றார்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன்

இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள், சீரியல்கள், விவாத நிகழ்ச்சி, ஸ்டார்ட் மியூசிக், அது இது போன்ற பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எனினும் ஆடல் மற்றும் பாடல் ஆகிய நிகழ்ச்சிகளாக ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் என்கிற இரண்டு நிகழ்ச்சிகள் நீண்ட வருடங்களாக மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளாக திகழ்ந்து வருகின்றன.

சூப்பர் சிங்கர் சீசன் 8

விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நடுவர்களாக பாடகி சித்ரா மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பிரியங்கா is Back

தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகின்றனர்.  விஜே பிரியங்கா, சில நாட்களுக்கு முன்பு வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த சீசனில் ரன்னர் அப்-ஆக வந்த பிரியங்கா மீண்டும் விஜய் டிவிக்கு எப்போது வந்து தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது மீண்டும் பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கி விட்டார்.

சித்ரா மற்றும் சங்கர் மகாதேவன்

அதன்படி பிரபல விஜே மா.கா.பா.ஆனந்த்-உடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8-வது சீசனில், வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் முக்கிய, ஆன்மீக பாடல்களை பாடக்கூடிய தெய்வீக ரவுண்டு - டெவோஷனல் ரவுண்டு வரவிருக்கிறது. இதில் பாடக்கூடிய குழந்தைகளுக்கு நடுவர்கள் சித்ரா மற்றும் சங்கர் மகாதேவன் உருகி கமெண்ட்களை கொடுக்கக் கூடிய ப்ரோமோக்களை காண முடிகிறது.

உருகி பாடி உருக வைக்கும் குழந்தைகள்..

சகல மதங்களையும் சேர்ந்த இந்த குழந்தைகள் சகல தெய்வீக பாடல்களையும் பக்தியுடன், உருகி பாடுவதைப் பார்த்து, “என்ன பக்தி.. என்ன பக்தி.. இந்த சின்ன குழந்தைகளுக்கு” என்று நடுவர்கள் உருகிக் கமெண்டுகளை கொடுக்கின்றனர். அதேபோல், “இந்த குழந்தைகள் மிகவும் சிறிய வயதில் சங்கீதத்தை, சாரீரத்தையும் தெளிவாக கற்று பயன்படுத்துகின்றனர், இவர்கள் ஆன்மீக பாடல்களை பாடுவதை பார்க்க ஆவலோடு இருக்கிறது” என்றும் சிலர் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் இறுதியில், அதாவது சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வர்லாம்.. வர்லாம் வா.. வனிதாவைத் தொடர்ந்து ஜூலி Vs தாமரை .. ஆரம்பமாகுது அனல் பறக்கும் வாதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

13th Feb 2022 Super Singer Junior 8 devotional round

People looking for online information on Devotional, Devotional round, Devotional Songs, HijabBan, HijabControversy, Hindu Songs, Music, Singer Junior Season 8, Supersingerjunior, Vijay Television will find this news story useful.