“அஜித் சார் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”… 12 வயது இயக்குனர் ஆஷிக் ஜினுவின் ஆசை இதுதானாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Advertising
>
Advertising

கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவனான ஆஷிக் ஜினு அடுத்தடுத்து படங்களை இயக்கி சாதனைப் படைத்து வருகிறார்.

இளம் வயது இயக்குனர்…

கேரளாவைச் சேர்ந்த சிறுவனான ஆஷிக் ஜினு தனது 10 வயதில் முதல் முதலாக குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். அதையடுத்து இதுவரை அவர் ஆறு குறும்படங்கள், ஒரு ஆவணப்படம், இரண்டு திரைப்படங்களை இயக்கி முடித்துள்ளார். இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக திருமதி செல்வி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரியாஸ்கான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறும்படங்களும் விருதுகளும்…

ஆஷிக் ஜினு இயக்கிய முதல் குறும்படமான 'பிடிகா' கேரளாவின் மிகச் சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு படம் என்ற பெருமையைப் பெற்றது. இளம் இயக்குனர்களுக்கான இந்திய அளவிலான யுனிவர்சல் ரெக்கார்ட் போரம் (Universal Record Forum) விருதையும் தட்டிச் சென்றது. ஆஷிக் இயக்கிய மற்றொரு குறும்படமான 'பசி' சிறந்த குறும்பட இயக்குனருக்கான 2020 ஆம் ஆண்டிற்கான விருதையும் இவருக்கு பெற்று தந்தது. ஊரடங்கு சமயத்தில் ஆஷிக் இயக்கிய 'தி ரூல் ஆஃப் பீஸ்' படத்துக்கு சிறந்த ஊரடங்கு சினிமா என்ற  சர்வதேச விருதைப் கிடைத்திருக்கிறது.

Feature films…

குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கிய மாஸ்டர் ஆஷிக் ஜினு , தி கொலம்பியன் அகடமி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதையடுத்து  இரண்டாவது திரைப்படமாக 'ஈவிஏ' எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவது திரைப்படமாக ‘திருமதி செல்வி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ரியாஸ்கான் நடித்துள்ளார். இந்த படம் சம்மந்தமாக படக்குழுவினரோடு ஆஷிக் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.


அஜித்தை இயக்க ஆசை…


இந்நிலையில் இந்த பேட்டியில் ஆஷிக் எதிர்காலத்தில் நடிகர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசையுடன் உள்ளதாகக் கூறியுள்ளார். அதில் “அஜித் சார் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க. உங்களோட சேர்ந்து ஒரு படம் பண்ணவேண்டும் என ஆசை உள்ளது. அதற்கு உங்கள் எல்லோரின் வாழ்த்துகளும் வேண்டும் “ எனக் கூறியுள்ளார். இந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“அஜித் சார் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”… 12 வயது இயக்குனர் ஆஷிக் ஜினுவின் ஆசை இதுதானாம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

12 year old young director ashik jinu wants to direct ajith

People looking for online information on Ajith, Ashik Jinu, Jinu, Riyas khan will find this news story useful.