11 YEARS OF SK.. ஷூட்டிங்கில் கேக் வெட்டிக் கொண்டாடிய 'மாவீரன்' படக்குழு.. வைரலாகும் BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

Advertising
>
Advertising

ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

"டான்" படத்துக்கு பின்,  இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரையுலகில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆவதையொட்டி, மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் கேக் வெட்டி இயக்குனர் மடோன் அஸ்வின், சரிதா ஆகியோருக்கு ஊட்டி விட்டார். மேலும் இயக்குனர் மடோன் அஸ்வின் & சிவகார்த்திகேயன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

11 Years Of Siva Karthikeyan Maaveeran Shooting Spot Celebration

People looking for online information on Maveeran, Sivakarthikeyan will find this news story useful.