அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தின் 11வது வருடம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த இதுவரை காணாத BTS PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடித்த 'மங்காத்தா' படம் வெளிவந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகிறது.

Advertising
>
Advertising

Also Read | சமந்தா நடிக்கும் PAN INDIA படம் 'யசோதா'.. டீஸர் ரிலீஸ் எப்போ? அதிரடியான போஸ்டர்!

நடிகர் அஜித்தின் 50 வது படமாக  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர்கள் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் ’மங்காத்தா’.

கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டது.

இந்த படத்தில் அஜித், வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.  மேலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மங்காத்தா அமைந்தது.

இந்த படம் வெளிவந்து இன்றுடன் (ஆகஸ்ட் 31,2022) 11 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு  இயக்குனர் வெங்கட்பிரபு, தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படங்களை "உங்கள் நம்பிக்கைக்கு நன்றி அஜித் அண்ணா" என கூறி வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.‌

 

Also Read | 18 ஆயிரம் அடி உயரத்தில் நடிகர் அஜித் குமார் பைக் ரைடு.. இமயமலையில் இருந்து வெளியான சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

11 Years Of Cult Mankatha Venkat Prabhu Ajith Kumar AK BTS Images

People looking for online information on 11 Years Of Cult Mankatha, Ajith Kumar, Mankatha, Venkat Prabhu will find this news story useful.