தமிழக அரசின் மாஸ் ஆன அறிவிப்பால் தியேட்டர் எல்லாம் இந்த தீபாவளிக்கு களைகட்ட போகுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கொரோணா 2-ம் அலைப் பரவலால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.

100% of audiences allowed in theaters from November 1st

பின் ஆகஸ்ட் 23 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன, திரையரங்க பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி வேண்டும் என்று அரசு வழிகாட்டி நெறிமுறை மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

100% of audiences allowed in theaters from November 1st

இதையடுத்து கோடியில் ஒருவன், தலைவி, லாபம், சிவக்குமாரின் சபதம், டாக்டர், அரண்மனை-3 போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தியேட்டர்கள் இயங்கி வந்தன. இதனால் படங்களின் வசூல் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வந்தன. படங்களின் வசூலும் வருவாயும் கனிசமாக குறைந்தன.

100% of audiences allowed in theaters from November 1st

இந்நிலையில் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. அதனுடன் விஷால் - ஆர்யா நடித்த எனிமி படமும் வெளியாக உள்ளது. மேலும் தீபாவளிக்கு மக்களின் வாங்கும் திறன் உயரும் என்பதால் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் கொரோணா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதால் தற்போது தமிழக அரசு தியேட்டரில்  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

100% of audiences allowed in theaters from November 1st

People looking for online information on Ajithkumar, Annaatthe, Beast, Rajini kanth, Suriya, TN Theatres, Valimai, Vijay will find this news story useful.