VIDEO: "இதுக்கு காரணமே நீங்கதான்".. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. கேக் வெட்டி கொண்டாடிய நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோஷியல் மீடியாக்கள் இன்றைய காலக்கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபலங்களின் அண்மைத் தகவல்களையும் செய்கைகளையும் உடனுடக்குடன் அவர்களை பின் தொடர்பவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது.

அவ்வகையில் "குக்வித்கோமாளி" நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவரும், சீரியல் நடிகையுமான தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கடந்ததை அடுத்து தமது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஸ்லிம் நயன்தாரா என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் தர்ஷா குப்தா, தமது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை அடுத்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார்.

இதற்கென சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார். இதனால் மதுரை, கன்யாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் சென்னை வந்தனர்.  மொத்தமாக 300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்த, தர்ஷா குப்தா, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார்.

இந்தியாவில் இப்படி ஒரு நடிகை தனது சோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது அரிதானது.

ரசிர்கள் கொடுத்த கிஃப்ட், பூங்கொத்து உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட தர்ஷா குப்தா, ரசிகர்களின் கேள்விகளுக்கும்  பதில் அளித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான். அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் ” என்று குறிப்பிட்டதுடன் சில ரசிகர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.

தர்ஷா குப்தா தற்போது, இயக்குநர் மோகன்.ஜி 2வதாக இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ரிச்சர்டு, கவுதம் மேனன், ராதாரவி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ALSO READ: "இந்தியா முழுக்க விஜயை விரும்புவாங்க!".. 'Thalapathy65'-ல் பணியாற்றும் நண்பன் பட கலைஞர் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

1 Million Instagram followers Dharsha Gupta celebrates with fans

People looking for online information on Dharsha Gupta, Fans, Instagram, Trending will find this news story useful.