கொரோனா இந்த மாசம் வரைக்கும் இருக்கும்னு ஒரு கணிப்பு! - 'தர்பார்' பிரபலம் பகிர்ந்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோணா இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களை பாதிக்காத அளவில் தற்காத்துக்கொள்ளும் விதமாக இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மருத்துவமனைகள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் போன்றவை வழக்கம் போல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் வரும் மக்களை காவல்துறையினர் அறிவுரை கூறி திரும்பி அனுப்பி வைக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மருத்துவர்களும் சிறப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் தீர்வு காணப்படாததால் அதனை தடுக்கும் விதமாக மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தர்பார் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில், அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன் கொரோனா வைரஸ் குறித்து முன்பே கணித்துள்ளானாம். அவர் பகிர்ந்துள்ள லிங்க்கில் அந்த சிறுவன் கடந்த 2019 ஆண்டு நவம்பர் முதல், 2020 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குள் உலக அளவில் ஒரு நோய் தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொரோனா நோய் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் மே மாதம் 29 ஆம் தேதிக்கு பிறகு அதன் தாக்கம் குறையும் என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளானாம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

தர்பார் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நாராயணன் கொரோனா குறித்து பகிர்ந்த ட்வீட் | Darbar Cinematographer Santhosh Shivan tweet

People looking for online information on Coronavirus, Lockdown, Santhosh Sivan will find this news story useful.