பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் நிலவரப்படி ஆரிக்கும் சனத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் பயமில்லாமல் கேள்விகளை முன்வைப்பதும் பலரையும் கவர்ந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
இந்நிலையில் சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும் அவர் நடித்து ரிலீஸ் ஆக இருக்கும் 'எதிர்வினையாற்று' படத்தின் ஹீரோவுமான அலெக்ஸ் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "சனம் ஷெட்டியின் இயல்பே இதுதான். அவர் மிகவும் நேர்மையானவர். அதேபோல் பாலாஜி சனம் ஷெட்டியை பற்றி தவறாக கூறியிருந்தால் அவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய வாய்ப்பில்லை"
"ஏனென்றால் போட்டியில் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக அவரை போட்டியில் இருந்து நீக்க மாட்டார்கள். மேலும் ஆரி சிறப்பாக விளையாடி வருகிறார். அர்ச்சனா போட்டியாளர்கள் மீதான கட்டுப்பாட்டை சற்று குறைக்கலாம். அதேபோல அனிதா அடிக்கடி அழுவது சில சமயங்களில் எரிச்சலாக இருக்கிறது. பாலா போட்டிக்காக அவ்வாறு செய்கிறாரா அல்லது அவரது இயல்பே இதுதானா என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.