ஏது? YASHIKA-வ DIVORCE பண்ணேனா? BIGG BOSS NIROOP-இடம் நேரலையில் ரசிகர் கேள்வி.. நிரூப் சொன்ன காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Niroop: நடந்து முடிந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நிரூப்.

Advertising
>
Advertising

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே வரை சென்றவர் பிரபல மாடல் நிரூப். இதனிடையே இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ராஜூ வெற்றியாளராக அதாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். அவரை அடுத்து விஜே பிரியங்கா இந்த நிகழ்ச்சியின் ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டார்.

ராஜூ வெற்றி

இதில் ராஜூ வெற்றி பெற்றதும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் நிரூப் நந்தகுமார் ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியுள்ளார். முந்தைய சீசன் போட்டியாளரும், பிரபல நடிகையுமான யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலரான நிரூப்பிடல் ரசிகர் ஒருவர் அவருடைய காதலை குறித்து கேட்டுள்ளார்.

நிரூப் நேரலை

முன்னதாக ரசிகர்களிடம் நேரலையில் உரையாடிய நிரூப் தனக்கு சரிவர டான்ஸ் ஆட வராது. அமீர் சொல்லித்தருவதாக சொல்லி இருக்கிறார். தனக்கு பிக்பாஸில் இருந்து இன்னும் பைசா வரவில்லை என ஜாலியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.

அரேஞ்ச் மேரேஜ்ல நம்பிக்கை இல்லை

அப்படி தான் ரசிகர்கள் நிரூப்பின் காதல் விவகாரம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிரூப், “என் காதலை பற்றி கேட்கிறீர்கள? என் காதலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. எனக்கு இந்த அரேஞ்ச் மேரேஜ்ல எல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. சில காரணங்களும் அதில் இருக்கின்றன.

யாஷிகாவை Divorce பண்ணேனா?

இதனை கேட்டவுடன், ரசிகர் ஒருவர், “அப்புறம் ஏன் யாஷிகாவை டைவர்ஸ் செய்தீர்கள்?” என்று பொசுக்குனு கேட்டுவிட, ஒரு கணம் ஷாக் ஆகி, சிரித்துவிட்டு நிரூப், “டிவோர்ஸ் பண்ணேனா? டிவோர்ஸ்லாம் பண்ணலங்க, எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் பிரியாமல் இருந்தால், ஒன்று நாம் கஷ்டப்படுவோம், இல்லை என்றால் கூட இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள்!” என்று பேசியுள்ளார்.

Also Read: 'ஏன் இப்படி பண்றீங்க'.. hatres குறித்து அர்ச்சனா மகள் சாரா.. DD-யின் மாஸ் அட்வைஸ்! சிங்கப் பொண்ணுப்பா!

தொடர்புடைய இணைப்புகள்

Why you divorce yashika biggboss Niroop answers to fan live

People looking for online information on Niroop, Niroop Nandakumar, Niroop Yashika, Niroop Yashika Divorce, Yashika Aannand will find this news story useful.