சூப்பர்ஸ்டாரும் லேடி சூப்பர்ஸ்டாரும்! அண்ணாத்த படத்தின் அடுத்த தாறுமாறான மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

அக்டோபர் 4 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு ஏற்கனவே அண்ணாத்த அண்ணாத்த எனும் முதல் சிங்கிள் பாடல் ரிலீசானது. இத்னைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை (09.10.2021) மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை இமான் இசையில் யுகபாரதி எழுதியுள்ளார். பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். டூயட் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

சித் ஸ்ரீராமுடன், ஸ்ரேயா கோஷல் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

When Superstar meets Lady Superstar ANNAATTHE second single

People looking for online information on Annaatthe, Nayanthara, Rajinikanth, Siva will find this news story useful.