விஜய் சேதுபதியின் இந்த படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் போஸ்டர் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமாருடன் விஜய் சேதுபதி இணையும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'இறைவி' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரொமான்டிக் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீஸர் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது .  அதனைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 ஆம் தேதி  வெளியாகவிருக்கிறது.


Vijay sethupathi's Sindhubaadh romantic second look poster released

People looking for online information on Anjali, Sindhubaadh, SU Arun Kumar, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.