"எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்".. தனது முதல் 'AK62' ட்வீட்டை லைக் செய்த விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் AK62 படத்தின் தனது அறிவிப்பு ட்வீட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | தமிழில் அறிமுகமாகும் பிரபல இளம் மலையாள நடிகர்.. தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! 

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

துணிவு படத்தின் இமாலய வெற்றியை  அடுத்து நடிகர் அஜித்தின் அடுத்த 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

சில நாட்களுக்கு முன் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தற்போது லண்டனில் இருக்கும்  இயக்குனர் விக்னேஷ் சிவன், AK 62 படத்தின் அறிவிப்பு வந்த போது தான் பதிவிட்ட ட்வீட்டை தற்போது லைக் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்❤️😇
காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் 😇😍 உங்களுடன் பெருமைமிகு #AK62 படத்தில் பணியாற்ற மிகப் பெரிய வாய்ப்பளித்தற்கு நன்றி அஜித் சார். வார்த்தைகளால் எனது சந்தோஷத்தை விவரிக்க இயலாது" என அந்த பதிவு அமைந்துள்ளது.

இந்த லைக் செய்த விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்க ஸ்கிரீன் ஷாட் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Also Read | மதுரை அழகர் கோயிலில் குடும்பத்துடன் நடிகர் சூரி.. தீர்த்தமாடி சாமி தரிசனம்! வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Liked His First AK 62 Announcement Tweet

People looking for online information on AK 62, Vignesh shivan will find this news story useful.