சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்திருந்தனர், மேலும், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட ஏரளாமனோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கவுதமன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்துள்ளார். ரஜினிகாந்த் உடனான 15 நிமிட சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டில், சார் பேட்ட படத்துல என்னா ஸ்டைல், என்னா எனர்ஜி, ஹேர்ஸ்டைல் ப்பா...! அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அப்படியா..?எல்லா கிரெடிட்ஸும் கார்த்திக் சுப்புராஜுக்கு தான்.
சார் எங்களுக்கு பேட்ட ரஜினி தான் எப்பவுமே வேணும் என்றதும், பண்ணிடுவோம் பண்ணிடுவோம்.. என்றார் என வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கவுதம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Sir Pettaila enna style, enna energy, hairstyle pppaah

🕴🏽- Panniduvom , Panniduvom
Shud I jump & whistle instantly 😁#ThalaivarMeet — Rakesh Gowthaman (@VettriTheatres) March 27, 2019