'மங்காத்தா' படத்தின் இசை காப்பியா ? - வெங்கட் பிரபு விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக  அறிமுகமானார் . நேற்றுடன் அவர் அறிமுகமாகி 22 வருடங்கள் ஆகிறது. இதனை அவரது ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் யுவனுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும், அவரது இசைத் திறமை குறித்தும் அவரது உறவினரும் இயக்குநருமான வெங்கட் பிரபு Behindwoods TV க்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  யுவனின் 50 வது படம் தான் என்னுடைய முதல் படமான 'சென்னை 28'. இது அப்போது எங்களுக்கு தெரியாது. பின்னர்  நினைத்து பார்க்கும் போது தான் தெரிந்தது.

அதே போன்று என்னுடைய 'பிரியாணி' திரைப்படம் யுவனின் 100 வது படம் . மகிழ்ச்சியாக இருக்கிறது. யுவனின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால் என்னுடைய பெயரும் இடம் பெறும்' என்றார்.

பின்னர் 'மங்காத்தா' படத்தின் பிஜிஎம் பற்றி கேட்டபோது, 50 சென்ட்டின் இசை தான் மங்காத்தா படத்தின் பின்னணி இசை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இசையை முதலிலேயே அமைத்துவிட்டார். பின்னர் யுவினிடம் எனக்கு 50 சென்ட் இசை போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதே டியூனுக்கு 50 சென்ட் பீட் போன்று மாற்றி அமைத்தார்' என்றார். 

'மங்காத்தா' படத்தின் இசை காப்பியா ? - வெங்கட் பிரபு விளக்கம் வீடியோ

Venkat Prabhu talks about Mankatha bgm is not copy

People looking for online information on Ajith Kumar, Mankatha, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.