சூர்யாவின் அடுத்தப்பட சென்சார் ரிப்போர்ட் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘உறியடி 2’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விஜயகுமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்ர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தையும் விஜயகுமாரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாதி அரசியல் குறித்து பேசும் இப்படத்தின் ஷூட்டிங் 36 நாட்களில் நிறைவடைந்ததையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்நிலையில், சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோபி வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் வரும் ஏப்.5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

Uriyadi 2 censored and certified as U

People looking for online information on 2D Entertainment, Suriya, Uriyadi 2 will find this news story useful.