நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்காமுடி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் செல்வா தற்போது மீண்டும் சீரியல் இயக்கவிருக்கிறார்.

அரவிந்த்சாமி, சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன்,கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா உள்ளிட்ட ஏராளமோனோர் நடித்து வரும் ‘வணங்காமுடி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சின்னத்திரையில் ‘சித்தரப்பாவை’,‘நீலா மாலா’ உள்ளிட்ட தொடர்களை இயக்கிய செல்வா தற்போது மீண்டும் மெகா சீரியல் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவரது ‘நீலாமாலா’ சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரைப்படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டதட்ட 27 திரைப்படங்களை செல்வா இயக்கியுள்ளார்.
சன் டிவிக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் மெகா சீரியல் ஒன்றை இயக்குநர் செல்வா இயக்கவிருக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகனாக ‘தெய்வமகள்’ கிருஷ்ணா (பிரகாஷ்), கதாநாயகியாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் ஹீரோயின் சரண்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.