போஷிகாவுக்கு ஆபத்து, பணத்துக்காக நாடகமாடும் நித்யா- தாடி பாலாஜி பகீர் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பிரபலமான நடிகர் தாடி பாலாஜி, தனது மனைவி மீது சரமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, ‘தனது மனைவி நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்த சிறிது காலமும் நடித்து மக்களை ஏமாற்றினார். எனது மகளை காரணம் காட்டி என்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

எஸ்.ஐ மனோஜ் என்பவருடன் சேர்ந்து நித்யா எனது மகள் போஷிகாவின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். தன் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்காக நித்யா என் மீது பொய் புகார்களை கூறி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் எனது அம்மா வீட்டிற்கு தான் நான் சென்றேன், என் மகளை பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் இருக்கும் வீட்டுப்பக்கம் சென்று 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், நான் அங்கு சென்று பிரச்னை செய்ததாக நித்யா புகார் தெரிவித்துள்ளார்.

பணத்திற்காக மட்டுமே என்னை பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு தந்தையாக எனது குழந்தைக்கு தேவையானதை செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், நித்யாவால் எனது குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது. எனது குடும்ப விவகாரத்தின் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு கமல்ஹாசன் சார் எனது குழந்தையின் கல்வி பற்றி விசாரிப்பார்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் குழந்தையை போர்டிங் ஸ்கூலில் சேர்க்க விரும்பினேன், ஆனால் அதையும் நித்யா கெடுத்துவிட்டார். குழந்தை படிக்கும் பள்ளியை மாற்றி மாற்றி கேம் ஆடுகிறார். நான் ஷூட்டிங் பணியாக வெளியூர் செல்லும் போது தனது சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது நித்யா எஸ்.ஐ மனோஜ் மற்றும் ஜிம் டிரெய்னர் ஃபயஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thaadi Balaji concerns his daughter is not safe, accuses his wife Nithya

People looking for online information on Bigg Boss Tamil, Nithya, Poshika, Thadi Balaji will find this news story useful.