கமாண்டோ வீரரின் பயோபிக்கை தயாரிக்கும் மகேஷ்பாபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்பி எண்டர்டெய்ன்மெண்ட் மூலம் இந்திய கமாண்டோ வீரரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கிறார்.

தற்போது தனது 25வது திரைப்படமான ‘மஹரிஷி’ திரைப்படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் நடிகர் மகேஷ்பாபு, சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கமாண்டோ வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தயாரிக்கிறார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து பல உயிர்களைக் காப்பாற்றி நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன். இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக மகேஷ்பாபு தயாரிக்கிறார்.

இயக்குநர் சசிகிரண் டிக்கா இயக்கும் இப்படத்தில் ஆத்வி சேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மேஜர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஷூட்டிங் 2019 பாதியில் தொடங்கும் எனவும், 2020-ல் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல், தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை நடத்திய பதில் தாக்குதல், இந்திய விமானப்படை காமண்டோ பாகிஸ்தான் ராணுவத்திடம் போர்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்படவிருக்கும் சூழலில், மும்பை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் பற்றிய கதையை படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Telugu Superstar produces the brave-heart Martyr's story of Mumbai attack

People looking for online information on G Mahesh Babu Entertainment Pvt Ltd., Mahesh Babu, Major, Sandeep Unnikrishnan, Sony Pictures Networks Productions will find this news story useful.