தளபதி விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபாவுடன் நடிகர் சூர்யா செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சூர்யா, நடிகர் விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருடன் இணைந்து நடிகர் சூர்யா செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
சூர்யா தனது ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘பெரிய அண்ணா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், ‘நேருக்கு நேர்’, ‘ஃபிரெண்ட்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்துள்ளனர். திரைப்படங்கள் மட்டுமின்றி நிஜத்திலும் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘காப்பான்’ லுக்கில் விஜய்யின் பெற்றோருடன் சூர்யா எடுத்துக் கொண்ட இந்த கூலான செல்ஃபியை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.