அதிரடி அப்டேட்: என்ஜிகே, காப்பானுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எப்போது தொடக்கம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'என்ஜிகே' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'காப்பான்' படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து 'இறுதிச் சுற்று' படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்களை கேட்டு சூர்யா பாராட்டியதாக ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  அதில் இஸ்லாம் வழக்கப்படி தலையை துணியால் மூடியபடி இயக்குநர் சுதா கொங்கராவுடன் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மெர் தர்ஹாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  சூர்யாவின் இந்த கெட்அப் இந்த படத்துக்காகவா ? அல்லது வழிபாட்டுக்காக அப்படி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

இந்த படம் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் இயக்கி நடித்துள்ள உறியடி 2 படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. 

Suriya and Sudha Kongara's film is expected to start on Apr 8th

People looking for online information on GV Prakash Kumar, Kaappaan, NGK, Sudha Kongara, Suriya will find this news story useful.